2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கட்சித் தலைவர்களை பிரதமர் சந்திப்பார்

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

எல்லை நிர்ணயம் தொடர்பில் சகல கட்சிகளின் தலைவர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளதாக  மகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, தெரிவித்தார்.

எல்லை நிர்ணய அறிக்கை என்னிடம் தான் சமர்ப்பிக்கப்படும், எனினும், அது தொடர்பில் கலந்துரையாட பிரதமருக்கு உரிமை உள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அது தொடர்பில் கலந்துரைாயடுவோம். சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கா சகல கட்சித் தலைவர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு, பிரதமர் சந்திக்கவுள்ளார்” என்றார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின், எல்லை நிர்ணய அறிக்கை நேற்றைய தினம், அமைச்சரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில், விசேட செய்தியாளர் சந்திப்பு அமைச்சில் நடைபெற்றது. அதன்போது, அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .