2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கனடா செல்ல திட்டமிட்ட இலங்கையர்கள் கேரளாவில் கைது

Freelancer   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளா - கொல்லம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த  இலங்கையர்கள் 11 பேரை கேரள பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் படகு மூலம் கனடா செல்லும் திட்டத்துடன் அங்கு தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த வாரம் சுற்றுலா விசாவில் தமிழகத்துக்கு வந்த இரண்டு இலங்கை பிரஜைகள் காணாமல் போயிருந்தனர்.

க்யூ பிரிவினர் அவர்களின் தொலைபேசி சமிக்ஞைகளைப் பின்பற்றி விசாரணைகளை முன்னெடுத்ததில், தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போயிருந்த இருவர் உட்பட 11 பேரை கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் ஏனைய ஒன்பது பேரும், தமிழகத்தின் ராமநாதபுரத்தில் உள்ள ஏதிலிகள் மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தலா 2.5 லட்சம் ரூபாவை கொழும்பில் உள்ள முகவர் ஒருவரிடம் வழங்கி, இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து படகு மூலம் கனடாவுக்குப் பயணம் செய்வதை உறுதி செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு உதவியாக இருந்த இந்தியர்களை தேடி கியூ பிரிவினர் தமிழகத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X