Editorial / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் வீழ்ந்து உயிரிழப்பு
நெடுந்தீவில் பயணிகள் படகில் தேங்காய் மூட்டைகளை ஏற்றும் போது கயிற்றில் தடுக்கி கடலில் வீழ்ந்தவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் புதன்கிழமை (10) காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, குறித்த நபர் நெடுந்தீவு மாவலி துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் "நெடுந்தாரகை" பயணிகள் படகில் ஏறுவதற்கு முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் விழுந்த நிலையில் வெளியே வராமல் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நெடுந்தீவு கடற்படை சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்டு குறித்த நபரை தேடி சடலமாகக் கண்டெடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தில், நெடுந்தீவு கிழக்கு, 15ம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிரேமகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago