2026 மே 18, திங்கட்கிழமை

dd

கம்பி கட்டி சைக்கிள் பிடித்த நால்வர் கைது

Janu   / 2026 மே 18 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இரவு வேளையில் வீதியின் குறுக்கே கம்பி கட்டி, அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்களை வீழ்த்தி கொள்ளையடித்து வந்த இருவரை, திங்கட்கிழமை (18) அதிகாலை கிராம மக்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதூக்கை, வட்டரக்க - பெருகட்டிய வீதியின் பெருகட்டிய பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாழடைந்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதற்கு முன்னரும், இதேபோன்று வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கம்பியில் சிக்குண்ட இளைஞர் ஒருவரின் கழுத்து அறுபட்டிருந்த சம்பவமும் இங்கு பதிவாகியுள்ளது.

இச்சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், மேலும் இருவர் ஹல்பராவ, தூவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தற்போது நான்கு சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X