Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கொட்டும் மழைக்கு மத்தியில் சோதனை நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (06) அன்று முன்னெடுக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்ளின் பங்கேற்புடன் வீதியோர சந்தை மற்றும் பெண்கள் சந்தை (Ladies Market) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது அங்கு காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டதுடன் எதிர்காலத்தில் அடிக்கடி பரிசோதனைகள் நடைபெறும் என்பதனையும் தெரிவிக்கப்பட்டது.
இதே வேளை உணவகங்கள் பரிசோதனை உட்படுத்தப்பட்டதுடன் அதன் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்கின்மையுடன் காணப்பட்டதுடன் அதை சரி செய்வதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.மேலும் இதில் நுகர்வுக்கு பொருத்தமற்ற கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
23 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
46 minute ago
1 hours ago