2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கொரோனா சிகிச்சை முடிந்தாலும் வீடு திரும்ப முடியவில்லை

Kogilavani   / 2021 மே 05 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில்,  கல்முனை மருதமுனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த  கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், வீடு திரும்புவதற்கு வாகன வசதிகள் வழங்கப்படாமையால், வைத்தியசாலையிலேயே கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹாவைச் சேர்ந்த சுமார் 60 பேர், மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதுடன் இவர்களில் பலர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட பின்னர் இவர்கள், சுமார் 10 தினங்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதற்காக, இரண்டு பஸ்களில், மேற்படி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் கொரோனா தொற்றிலிருந்து தாம் மீண்டுள்ளப் போதிலும்  ஊர்களுக்குத் திரும்புவதற்கு வாகன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.   

இவர்களில் 15 சிறுவர்களும் 9 மாதக் குழந்தையொன்றும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 10 நாட்களுக்குத் தேவையான ஆடைகள், அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே கொண்டுவந்ததாகவும் எனினும் அவை தற்போது முடிந்துவிட்டதால், சிறுவர்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு இருப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே தமக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென்று, பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .