2025 ஜூலை 14, திங்கட்கிழமை

களுபோவில வைத்தியசாலையின் அறையொன்றுக்கு பூட்டு

Editorial   / 2020 மார்ச் 31 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுபோவில வைத்தியசாலையில் 5 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளரமை கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த வாட்டினை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரட்டுவை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கு கடையில் இருந்த ஊழியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் 20 ஆம் இலக்க வாட்டினை சேர்ந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று உயிரிழந்திருந்தார்.

நீர்கொழும்பு - கொச்சிக்கடை - போரதொட்டை பகுதியை சேர்ந்த 64 வயதான அவர் முன்னதாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்ற தனியார் வைத்தியசாலை ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .