Editorial / 2025 டிசெம்பர் 19 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலய கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் வெள்ள நீர் புகுந்து உள்ளமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு ள்ள நிலையில், நோய் தொற்றுகளால் மாணவர்கள் பாதிக்கும் அபாய நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் , பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெள்ள நீரை வழிந்தோட செய்யும் வகையில், JCB இயந்திரம் மூலம் பாதுகாப்பாக தற்காலிக கால்வாய்களால் நீர் வழிந்தோட செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
1 hours ago