Editorial / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தக் கதை ஒரு மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கையைச் சுற்றி நிகழ்ந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மையான பெயர்களைப் பாதுகாக்க, கற்பனையான பெயர்களை இங்கு பயன்படுத்தி இது தொகுக்கப்பட்ட ஒரு கிரைம் கதையாகும்.
அர்ஜுன் – ஒரு வெற்றிகரமான மென்பொருள் பொறியாளர். 2019-இல் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, குழந்தை தன் சாயலில் இல்லை என்ற சந்தேகம் அர்ஜுனுக்கு ஏற்பட்டது.
மனைவி பிரியாவிடம் நேரடியாகக் கேட்கத் தயங்கிய அவர், இந்தச் சந்தேகத்தை மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டார். அவ்வப்போது, இது பற்றி கூகுள் தேடல்கள், அதில் குழந்தை யார் சாயலிலும் இல்லாமல் பிறப்பது இயல்பு தான் என்ற தகவல்கள் எல்லாம் அவருடைய நெருடலுக்கு மருந்தாகின.
இப்படியே, ஆண்டுகள் உருண்டோடின.2025-இல், பிரியாவின் பழைய செல்போனை ரிப்பேர் செய்த அர்ஜுன், அதில் வாட்ஸ்அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்து, பழைய பேக்அப்பை ரீஸ்டோர் செய்தார். அப்போதுதான் அதிர்ச்சி!
2019-இன் சாட் ஹிஸ்டரி முழுவதும் திரும்ப வந்தது. அதில் பிரியா, தன் நெருங்கிய தோழியும் செவிலியருமான லதாவுடன் பேசிய செய்திகள் இருந்தன. இதை பற்றி மனைவியிடம் விசாரித்த போது ஆறு ஆண்டு ரகசியம் நொறுங்கி விழுந்தது.
பிரசவ நாளில், பிரியா பெற்றெடுத்தது ஒரு பெண் குழந்தையை. ஆனால் ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையால், தோழியும் செவிளியருமான லதாவின் உதவியுடன் அதே நாளில் பிறந்த இன்னொரு தம்பதியின் ஆண் குழந்தையுடன் தன் பெண் குழந்தையை மாற்றிவிட்டார்.
குழந்தை பிறந்ததும் அந்த இடத்திலேயே குழந்தையின் கையில் சீரியல் நம்பருடன் இருக்கும் டேக் ஒன்றை கட்டி, அதில் பிறந்த நேரம், தாயின் பெயர், அட்மிஷன் எண் போன்ற விபரங்கள் எழுதப்படும். அதன் பிறகு அந்த குழந்தையை சிறிது நேரம் இன்குபேட்டரில் வைப்பது அந்த மருத்துவமனையின் வாடிக்கை.
இந்த டேக் எழுதி குழந்தையின் கையில் கட்டும் வேலையை செய்து வந்தவர் தான் செவிலியர் லதா. திட்டமிட்டபடி, லதாவிற்கு பிறந்த குழந்தையின் கையில் டேக்கை கட்டும் போது எழிதாக வெளியே எடுக்கும் படி லூசாக ஓட்டினார். அதே போல இன்னொரு தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தையின் கையிலும் இதே போல டேக்கை லூஸாக ஓட்டினார்.
இன்குபேட்டரில் வைத்து, இரண்டு குழந்தைகளின் டேக்கையும் மாற்றி விட்டார். வேலை முடினஹ்து, ரெக்கார்டுகளை மாற்றி, போலியான பதிவுகள் உருவாக்கி விட்டார். இதற்காக லதாவுக்கும், சில ஊழியர்களுக்கும் 50,000 ரூபாய் கொடுத்திருந்தார்.
இந்த ரகசியம் அர்ஜுனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அர்ஜுன். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: செவிலியர் லதா 2024-இல் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். மருத்துவமனை ரெக்கார்டுகளை ஆராய்ந்தபோது, நிர்வாகத்துக்கு தெரியாமல் லதா தனியாக இந்தச் செயலைச் செய்திருப்பது தெரியவந்தது.
அப்போது பணியாற்றிய மற்ற செவிலியர்களை விசாரித்தபோது, "ஏதோ சந்தேகமான சம்பவம் நடந்தது போல் தோன்றியது, ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. லதா மட்டுமே இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உண்டு" என்று கூறினர்.
அர்ஜுனின் உண்மையான மகள் எங்கே? அந்த ஆண் குழந்தை யாருடையது?போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கியது. ரெக்கார்டுகளை ஆராய்ந்து, அதே நாளில் ஆண் குழந்தை பிறந்த தம்பதியைக் கண்டுபிடித்தனர். அந்தத் தம்பதி – ராம் மற்றும் சுதா. அவர்களிடம் தான் அர்ஜுனின் பெண் குழந்தை வளர்ந்து வருகிறது.
சமீபத்தில் அர்ஜுனும் பிரியாவும் தங்கள் பூர்வீக சொத்தில் ஒரு பகுதியை பிரித்து விற்பனை செய்திருந்தனர். அந்த சொத்தை வாங்கியவர் வேறு யாருமல்ல, சாட்சாத் அர்ஜுனின் மகளை வளர்த்து வரும் ராம்-சுதா தம்பதி தான்.
அதாவது, அர்ஜுனின் உண்மையான மகள் (பெண் குழந்தை) ராமின் வீட்டில் வளர்ந்து வருகிறாள். அர்ஜுனின் பூர்வீக சொத்து அவர்களின் வீட்டுக்கு சென்றுள்ளது. அர்ஜுனிடம் வளரும் ஆண் குழந்தை ராமுக்குப் பிறந்தது!
இரு குடும்பங்களும் அதிர்ச்சியில் உறைந்தன. எல்லாவற்றையும் போலீஸ் விளக்கிய பிறகு, DNA டெஸ்ட் உறுதிப்படுத்தியது. சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகள் அவரவர் உண்மையான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
அர்ஜுனும் பிரியாவும் ராமுக்கு சொத்தை விற்ற நாள் – 2024 நவம்பர் 11, திங்கட்கிழமை. அதே நாளில்தான் குழந்தையை மாற்றிய செவிலியர் லதா விபத்தில் இறந்திருந்தார்! இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால், நவம்பர் 11 தான் இரண்டு குழந்தைகளின் பிறந்த நாளும் என்பது தான்.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago