Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்துக்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடனான சந்திப்பை, காணாமற்போனோருக்கான அலுவலகம் இன்று (16) நடத்தவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேரந்த காணாமற்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடனான இந்தச் சந்திப்பு, கொழும்பில் நடைபெறவுள்ளதென அலுவலகம் அறிவித்துள்ளது.
இச்சந்திப்பு, இல. 24 ஹோர்டன் பிளேஸ், கொழும்பு 7 என்ற முகவரியிலுள்ள சர்வதேச தொடர்புகளுக்கும் உபாய ஆய்வுகளுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் (லைட் ஹவுஸ்) பி.ப 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இந்த அலுவலகம் காணாமற் போனோருக்கான தகவல்கழள அறியவும் அவர்களின் குடும்பத்தினரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்கில் நிறுவப்பட்டது.
குறித்த அலுவலகம், இவ்வருடத்தின் மே மாதத்தில் ஆரம்பித்திருந்த நிலையில், மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மக்கள் தொடர்பாடல் நிகழ்வுகளை நடத்தியிருந்தது. இந்நிலையிலேயே, மேல்மாகாணத்துக்கான அமர்வு, இன்று இடம்பெறவுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான சந்திப்புகள் நடைபெறவுள்ளதென்றும் அலுவலகம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025