2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு நாளை அனுஷ்டிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமானது (OMP)பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை, நாளை ( 30) நினைவுக் கூறுகின்றது.

2011 ஆம் ஆண்டின் பிரகடனத்தை தொடர்ந்து, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஆயிரிக்கணக்கானோர் இந்த நாளில் நினைவுக்கூறப்படுகிறார்கள். கடந்த ஆண்டு ஓகஸ்ட் 30 ஆம் திகதி, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முதன்முதலில் அரச தலைமையிலான  நிகழ்வாக நடத்தியது.

இதற்கமைய, இந்த வருடம் காணமால்போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தின நிகழ்வுகள் நாளை (30) பிற்பகல் 12.30-3.30 வரை, இல:- 32, சேர் மார்க்கஸ் பெர்ணான்டோ வீதி, கொழும்பு 7 இல் உள்ள, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளது.

இதன்போது, “வலி ஒரு போதும் மறையாது, உண்மையை கண்டுபிடிப்பதற்கான எங்கள் பொறுப்பை நிறைவேற்றுவோம்” என்ற தலைலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் ஒன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .