2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காலி கைதி மரணம்

Mithuna   / 2024 ஜனவரி 04 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலி சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலி - கொட்டாவ கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X