Janu / 2026 மார்ச் 31 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிமையாளரின் அனுமதியின்றி தங்கச் சங்கிலியை அடகு வைத்த சம்பவம் தொடர்பாக, இளம் நடிகையான ஹர்ஷி ரசங்கா தலங்கம பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டு, கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
பிரபல கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்சவிடமிருந்து 9 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்கச் சங்கிலியை, அவருக்கு தெரியாமல் பத்தரமுல்லை பகுதியிலுள்ள 'எல்.பி ஃபைனான்ஸ்' (LB Finance) கிளையில் அடகு வைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாலையை அடகு வைத்து 6 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டமை தொடர்பாக, பானுக்க ராஜபக்ச செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (30) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் அந்த சங்கிலியை அடகு வைத்ததை ஏற்றுக்கொண்டார். மேலும், அதனை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்
விடயங்களை ஆராய்ந்த பதில் நீதவான், சந்தேகநபரான ஹர்ஷி ரசங்காவை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன், குறித்த தங்க சங்கிலியை தலங்கம பொலிஸார் பொறுப்பேற்று, அடுத்த வழக்கு தவணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் நீதவான் இதன்போது கட்டளையிட்டார்.
அத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொளியொன்றில், குறித்த தங்கச் சங்கிலி தனக்கு பானுக்க ராஜபக்சவினால் பரிசாக வழங்கப்பட்டது என்று ஹர்ஷி ரசங்கா உரிமை கோரியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கு எதிராக தான் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அறிக்கைகளின்படி, பானுக்க ராஜபக்சவுக்கும் ஹர்ஷிக்கும் இடையில் நிலவிய முந்தைய காதல் உறவின் போது, குறித்த தங்கச் சங்கிலி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களது பிரிவின் பின்னர், கிரிக்கெட் வீரர் தனது தங்கச் சங்கிலியை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது, அந்த தங்கச் சங்கிலி அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நடிகை, அதன் அடகு ரசீதையும் அவரிடம் வழங்கியுள்ளார். அந்த தங்கச் சங்கிலியை அடகு வைத்து சுமார் 6 இலட்சம் ரூபாய் வரை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த அடகு ரசீதை ஆதாரமாக கொண்டு தலங்கம பொலிஸ் நிலையத்தில் பானுக்க ராஜபக்ச முறைப்பாடு செய்ததையடுத்து நடிகை ஹர்ஷி ரசங்கா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 'நம்பிக்கை துரோகம்' மற்றும் 'நேர்மையற்ற முறையில் சொத்தை முறைகேடு செய்தல்' ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு மீண்டும் ஏப்ரல் 22-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் குறித்த தங்க மாலை மற்றும் பதக்கத்தை ஹர்ஷியிடமிருந்து பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு தலங்கம பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பதில் பொறுப்பதிகாரி (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் மாலவீரவின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
19 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
1 hours ago