Editorial / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குளவி கூட்டின் ஆபத்து குறித்தும் அதை அகற்ற வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
57 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
01 May 2026