Freelancer / 2022 ஜூன் 19 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
சமகால பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் நாளை (20) திங்கட்கிழமை முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் வழமைபோல நடைபெறும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
நாளைய தினம் பாடசாலைகள் நடைபெறுமா? இல்லையா ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் இருந்தது.
இருந்த போதிலும், இன்று (19) மாலை கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் புள்ள நாயகம் ஆகியோர் கிழக்கிலுள்ள 17 வலயக்கல்விப் பணிப்பாளர்களோடும் "சூம்" முறையிலான தொழில்நுட்பத்துடன் இணைந்து இந்த கூட்டத்தை நடாத்தி மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
அதேவேளை, தூர பிரதேச பாடசாலைகளுக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் வீட்டிலிருந்து ஒன்லைன் முறைமூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் அதனை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே அறிவித்தபடி அருகிலுள்ள பாடசாலைகளுக்கு யாரையும் இணைப்பு செய்ய அனுமதிப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய சகல ஆசிரியர்களும் பாடசாலைக்கு செல்ல வேண்டும். செல்லமுடியாத எரிபொருள் பிரச்சனை உள்ள ஆசிரியர்கள் வீட்டிலிருந்து ஒன்லைன் மூலம் கற்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, தூரத்துக்கு செல்லும் மாணவர்கள் எரிபொருள் பிரச்சினை காரணமாக செல்ல முடியாவிட்டால் அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பொருத்தமான பாடசாலைக்கு சென்று கல்வியை கற்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள் ஏனைய விடயங்கள் தொடர்பாக அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் முடிவு எடுக்கவும் அங்கு தீர்மானிக்கப்பட்டது.
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago