Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Janu / 2025 மே 22 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பளத்தில் இருந்து சம்பாதிக்க முடியாத சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குண்டசாலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏகநாயக்க வலவ்வே அசேலவை, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, பிணையில் வியாழக்கிழமை (22) விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்..
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 முதல் 2016 வரை பிரதேச சபையின் தவிசாளர் பணியாற்றிய சந்தேக நபர், ஒரு வருடத்திற்குள் தனது சம்பளத்திலிருந்து சம்பாதிக்க முடியாத சொத்துக்களைப் பெற்றுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைகள் நிறைவடைந்ததாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு சாத்துதல்களை புலனாவ்வு செய்வதற்கான ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
14 Jul 2025
14 Jul 2025