Editorial / 2025 ஜூன் 19 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

தோட்டத்தில் தேங்காய் பறிக்கச் சென்ற தம்பதியினரை குளவி கொட்டியதில், கணவர் உயிரிழந்துவிட்டதாகவும், மனைவி படுகாயமடைந்துள்ளதாகவும் அங்குணகொல பெலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தம்பதியினர் உள்ளூர்வாசி ஒருவருடன் தேங்காய் பறிக்கச் சென்றிருந்தபோது, தேங்காய் பறித்துக்கொண்டிருந்தபோது குளவிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆண் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மனைவி எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குளவித் தாக்குதலால் இறந்தவர் மூன்று குழந்தைகளின் தந்தையான 69 வயதான அலுத் துரகே அந்திரிஸ் என்பவர் ஆவார்.
34 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago