Freelancer / 2025 ஜூலை 26 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சீதுவ ராஜபக்ஷபுர பகுதியில் இன்று (26) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தனது குழந்தையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் ஒரு மின்னணு தராசு ஆகியவற்றை குழந்தையின் பொம்மைக்குள் இருந்து பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதற்கமைய, குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஐஸ் பெக்கட்டுக்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தப் பெண் தனது 8 வயது குழந்தைக்கு பொம்மையைக் கொடுத்து, குழந்தையுடன் கொட்டாஞ்சேனையில் இருந்து சீதுவ பகுதிக்கு போதைப்பொருட்களைக் கொண்டு வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. R
59 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
3 hours ago