2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கூட்டணி குறித்து இன்று முக்கிய தீர்மானம்

Editorial   / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான 'சமகி ஜனபல வேகய' எனப்படும்  கூட்டணியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (14) மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து கலந்துரையாட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய கூட்டணி தொடர்பில் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதிய கூட்டணியின் சின்னமாக இதயத்தை  தெரிவுசெய்துள்ள போதும், அதற்கு செயற்குழுவில் உள்ள பெரும்பலான உறுப்பினர்கள் இணக்கம் வெளியிடவில்லை.

யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என, பெரும்பாலானவர்கள்  கருத்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க் கட்சித் தலைவர்  கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .