J.A. George / 2021 ஜூன் 01 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பில் கப்பலின் கெப்டன், தலைமை பொறியிலாளர் மற்றும் பிரதி தலைமை பொறியியலாளர் ஆகிய மூவரிடம் வாக்குமூலம் நேற்று (31) பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதன்போது, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கேப்டனிடம் 14 மணித்தியாலங்களுக்கு அதிக காலம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தலைமை பொறியிலாளரிடம் 13 மணித்தியாலங்களுக்கு அதிக காலம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிரதி தலைமை பொறியியலாளர் சுமார் 12 மணித்தியாலங்களுக்கு அதிக காலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த வாக்குமூலங்களை சட்டமா அதிபரிடம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .