Freelancer / 2025 நவம்பர் 14 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.
கைது செய்யப்பட்ட ஆண், துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும், அவர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபரான பெண்ணுக்கு 32 வயது எனவும், அவர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது, கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் இவர்களைத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026