J.A. George / 2021 மார்ச் 09 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 5 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பகுதியை 72 வயதான பெண்ணொருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 20ஆம் திகதி மரணித்தார்.
ஹெம்மாத்தகம பகுதியை சேர்ந்த 19 வயதான யுவதியொருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 6ஆம் திககி உயிரிழந்தார். கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணித்தார்.
தர்கா நகரை சேர்ந்த 51 வயதான பெண்ணொருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் உயிரிழந்தார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்19 தொற்றுக்கு உள்ளான அவர், கொத்தலாவல பாதுகாப்பு பீட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது மரணித்தார்.
கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர், நேற்று மரணமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட்19 தொற்றுறுதியானது. இதனையடுத்து தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
ஜாஎல பகுதியை சேர்ந்த 59 வயதான பெண்ணொருவர் இன்று மரணித்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொவிட்19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்ட அவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago