S. Shivany / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக, கொவிட் 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 402 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கொழும்பில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10, 140 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 188 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,502 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்19 தொற்றாளர்களாக 878 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
27 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
1 hours ago