2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொவிட் நிதியத்தின் வைப்பு 871 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அன்பளிப்பு செய்த 05 மில்லியன் ரூபாய் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 

அரச சார்பற்ற நிறுவனங்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.குணரத்ன தனது சம்பளத்தை சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்பு செய்தார்.

நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 871மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். 

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X