Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு இன்று (08) 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் வழங்கிய 29.5 மில்லியன் ரூபாயையும், அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 2.8 மில்லியன் ரூபாயையும், அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தனது அமைச்சுப் பதவிக்கான ஏப்ரல் மாத சம்பளத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கிவைத்தனர்.
னிலீவர் ஸ்ரீ லங்கா லிமிட்டட் 10 மில்லியன் ரூபாயும் முகாமைத்துவம் தொடர்பான பட்டப் பின்படிப்பு நிறுவனம் 5 மில்லியன் ரூபாயும், கிரம விமலஜோதி தேரர் பௌத்த கலாசார மத்திய நிலையம் 2 மில்லியன் ரூபாயும், அத்தனகல்ல ரஜமகா விகாரை 10 மில்லியன் ரூபாயும மலலசேகர மன்றம் 3 மில்லியன் ரூபாயும் உள்ளடங்களாக இந்த அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலாகும் போது கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியன் ரூபாயை கடந்துள்ளது.
0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
58 minute ago
1 hours ago