Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பெப்ரவரி 6ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார்.
மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இருவரும் 2011 டிசெம்பர் 10ஆம் திகதியில் கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (10) அன்று ஆஜரான முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார்.
6 hours ago
8 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 May 2026
16 May 2026