Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டதெனியாவ சிறுமி சேயா சந்தவமியின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்ட துனேஷ் பிரியசாந்த அல்லது கொண்டயா எனும் நபர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவில் மனுத்தாக்கல் செய்து, ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, கொண்டயாவைப் பிரபலப்படுத்தி, இளம்சமுதாயத்தினருக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்ததார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
கொண்டயாவை ஊடகங்களுக்கு முன்னிறுத்தி அவரை பிரபலபடுத்த சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன உள்ளிட்ட சிலர் முயற்சிக்கின்றனர். இதற்காக பல பொய்களையும் கூறுகின்றனர். மனித உரிமைகளுக்காக போராடுகின்றோம் என்று கூறுகின்றனர். ஆனால், கொண்டயா போன்ற குற்றவாளிக்காக ஏன் இவர்கள் இவ்வாறு ஆதரவாக செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை.
கொண்டயாவை, பொலிஸார் பாரதூரமாக தாக்கியதாகக் கூறி, மனித உரிமை ஆணைகுழுவில் முறையிட்டு அது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றையும் அண்மையில் அனுப்பியிருந்தனர். அந்த அறிக்கையில் முற்றிலும் பொய்யான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
சேயா கொலை வழக்கில் அவர், செப்டெம்பர் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு 24ஆம் திகதியன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
பொலிஸார் தாக்கியிருந்தால் அப்போது கூறியிருக்கலாம், அடுத்து, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் 26ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கூறியிருக்கலாம். ஆனால் கூறவில்லை.
அதனையடுத்து ஒக்டோபர் 1ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் மீண்டும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், அவர் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் தற்போது, தான் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
அத்துடன், சட்டத்தரணியின் அறிக்கையில் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது, தான் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கொண்டையா கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவல் ஏனென்றால்; கொண்டையானவை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவே இல்லை.
அத்துடன் கொண்டையா மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் உள்ளதுடன் மற்றுமொரு வழக்கில் 5 வருடங்கள்; ஒத்திவைக்கப்பட்ட 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீடொன்றுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு நுழைந்து, 15 வயது சிறுமியை தூக்கிச் சென்ற வழக்கில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறு பொய்த் தகவல்களை கூறும் சட்டத்தரணிகளுக்கு எதிராக எம்மால் வழக்குத் தாக்கல் செயய்யமுடியும். அத்துடன், சட்டதரணிகள் ஒழுக்கக்கோவைக்கு அமைவாகவும் நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .