2025 மே 19, திங்கட்கிழமை

கொண்டையாவை அவரது தாயார் பிணையில் எடுத்தார்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொண்டையா' என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவை பிணையில் எடுப்பதற்காக அவரது தாயார் கையொப்பம் இட்டுள்ளமையால் அவரை விடுதலை செய்ய, கம்பஹா நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (23) அனுமதியளித்துள்ளது. 

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா, இரண்டு வழக்குகளில் இருந்து பிணையில் கடந்த புதன்கிழமை (21) காலை விடுவிக்கப்பட்டிருந்தார். 

எனினும், அன்று மாலை வரை அவரை பிணையில் எடுக்க எவரும் முன்வராததன் காரணமாக அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு  கம்பஹா நீதவான் உத்தரவிட்டார்.  

இதற்கமைய கொண்டையா, மஹர சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X