2025 மே 19, திங்கட்கிழமை

காணொளி ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்துள்ள காணொளி ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று காணாமல் போனோர் தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

குறித்த காணொளிகளை தமது ஆணைக்குழு ஆய்வுக்குட்படுத்தியது என தெரிவித்த அவர்,இதன் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை எனவும் இவற்றையும் இறுதிக்கட்ட யுத்ததத்தின்போது இடம்பெற்ற சில சம்பவங்களுக்கான ஆதாரங்களாக கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,இவை உண்மையென்று நிரூபிக்க மேலும் ஆதாரங்கள் இருக்கக்கூடும்.எனவே,இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X