Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில், கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல்நகர் பகுதியில் அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றுவந்த நிலையில், அந்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் ஒன்று பரவியதை அடுத்து இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் திடீரென அதிகளவில் குவிக்கப்பட்டமையால் பதற்ற நிலை அதிகரித்தது.
எனினும், கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினர் , ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு தருமாறு ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினரை கேட்டதற்கு அமைவாக, குறித்த ஆடைத் தொழிற்சாலை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago