2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குழந்தையைத் தூக்கிய எஜமானியை குதறியெடுத்த நாய்

Thipaan   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன்

வீட்டு எஜமானி, பக்கத்து வீட்டுக் குழந்தையைத் தூக்கி வைத்திருந்தமையைப்  பார்த்துச் சினமடைந்த வளர்ப்பு நாய், எஜமானியைக் கடித்துக் குதறிய சம்பவமொன்று கம்பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  கம்பளை, சிங்ஹாபிடிய பகுதியில்; பெண்னொருவர், நீண்டகாலமாக நாய் ஒன்றைச் செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.

இந்த நாய், வீட்டுக்கு வெளியாட்கள் வருவதைப் பெரிதும் விரும்புவதில்லையாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (25) தனது எஜமானி, பக்கத்து வீட்டிலுள்ள மூன்று வயதுக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியுள்ளார்.

இதனை அவதானித்துக்கொண்டிருந்த நாய், எஜமானியைப் பார்த்து குரைக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவர், நாயை அங்கிருந்து துரத்தியுள்ளார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நாய், எஜமானி தூக்கி வைத்திருந்த குழந்தையைப் பாய்ந்து கடிக்க முற்பட்டுள்ளது. அதைத் தடுத்த எஜமானியையே குறித்த நாய் கடித்துத்துள்ளது. தற்போது எஜமானி, கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X