2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

சந்தேகநபரை விடுவிக்க இலஞ்சம் வழங்க முயற்சித்தவர் பிணையில் விடுதலை

Editorial   / 2019 ஜூன் 18 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினரொருவரை விடுதலை செய்வதற்காக,  ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, 2,50,000 ரூபாய் இலஞ்சம் கொடுக்க முற்பட்ட போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

15,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் 4 இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டிலும் சந்தேகநபரை விடுதலை செய்யுமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இவருக்கு எதிரான வழக்கை செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி எடுப்பதற்கும் அன்றைய தினம் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யுமாறு, சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கடந்த வாரம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கமைய, சந்தேகநபர் இன்று பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .