Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவன்காட் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நால்வரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமன் திசாநாயக்க, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க தன்னை கைதுசெய்வதை தவிர்க்குமாறு கோரி தாக்கல் செய்த முன்கூட்டிய பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான ரங்க திசாநாயக்க நிராகரித்திருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
முன்னதாக, அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
1 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
01 May 2026