Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நடைபெறும் அரச மட்டத்திலான தேசிய இந்து சமய நிகழ்வுகளின் போது அதில் கலந்துகொள்ளும் இந்துக்கள், எமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பாரம்பரிய உடைகளை அணிவது பொருத்தமாக இருக்குமென சர்வதேச இந்து மத பீடத்தின் தலைவர் தேசபந்து சிவஸ்ரீ.பாலா. ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நமது எதிர்கால சந்ததியினருக்கு நல்ல முன்னுதாரணமாக அமையும் இவ்விடயத்தில் மேட்டுக்குடி உயர்பதவி வகிக்கும் இந்துக்களாயினும் அரசியல்வாதிகளாயினும் விதிவிலக்காக நடந்துகொள்ளக் கூடாது.
ஓர் இந்து மத குருவாக சொல்லவேண்டிய விடயங்களை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லாமல் அல்லது பேசாமல் நமக்கேன் பகை என நினைத்து, இந்து குருமார் மௌனிகளாக கடந்த காலத்தில் இருந்ததை நமது சமூகம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
அரசாங்கமே இன்று நல்லாட்சி, கருத்துச் சுதந்திரம் என்ற விடயங்களில் கவனம் செலுத்தும் போது நமது சமயத்தை, சமூகத்தை, கலை மற்றும் கலாசார பாரம்பாரியங்களை எடுத்துக்கூறி விழிப்படையச் செய்ய வேண்டியது இந்து குருமார்களின் கடமையேயாகும்.
ஆலய தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள், அறநெறி சார்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் நாம் எதை பிரதிநிதித்துவப்படுத்தி என்ன நிகழ்வில் கலந்துகொள்கின்றோம் என்பதை சிந்தித்து செயற்பட வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago