Freelancer / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நாளை (14) முதல் 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 17 இலட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெறுகின்றன. இவர்களுக்காக சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை 28 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.
அதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 3,500 ரூபாய் மேலதிக கொடுப்பனவு பெற்ற குடும்பங்களுக்கான கொடுப்பனவு 4, 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதுவரையில் 2, 500 ரூபாய் மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொண்ட குடும்பமொன்றுக்கு 3,200 மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் 1,500 ரூபாய் பெற்ற குடும்பத்துக்கு 1,900 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026