2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சமுகமளித்தால் ரூ.2,500; அலுவலகத்துக்கு ரூ.100,000

Princiya Dixci   / 2016 நவம்பர் 30 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகக் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாயை வழங்குவதற்கும் நாடாளுமன்ற வருகைக்கான நாளொன்றுக்கான கொடுப்பனவை 2,500 ரூபாயாக அதிகரிக்கவும், அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று பெற்றோலியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.  நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்த அமைச்சரவை பத்திரங்களுக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். 

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதேவேளை, மக்களுக்குரிய சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கு போதிய வசதிகள் அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார். இதேநேரம், தற்போது எம்.பி. ஒருவரின் நாடாளுமன்ற வருகைக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .