Freelancer / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் அமைச்சரவை சலுகைகளை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,
அமைச்சுப் பதவி என்பது பாரியதொரு பாக்கியம் அல்ல என்றும், அது பெரும் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் என்ற முறையில் சலுகைகள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் திறமையாகவும், தூய்மையான நிர்வாகத்தை நோக்கியும் பணியாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன், என்றார்.
அரச நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஊழலை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி மேலும் கோரிக்கை விடுத்தார். மேலும் பொதுச் சேவைக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றும் கூறினார்.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச நிறுவனங்களை சீர்படுத்துவது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (R)
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago