2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிகிரியாவை பார்க்க தடை

Editorial   / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

70 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குளவி கொட்டுக்கு இலக்கானதை அடுத்து, சிகிரியாவிற்குள் நுழைவதை மத்திய கலா சார நிதியத்தினால் புதன்கிழமை (14) பிற்பகல் இடைநிறுத்தியது.

குளவிகளின் அபாயம் காரணமாக நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவுக்குச் செல்லும் வாய்ப்பை இன்று (14) இழந்துள்ளதாக சிகிரியா திட்ட முகாமையாளர் துசித ஹேரத் தெரிவித்தார்.

26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் 13 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்து சிகிரிய பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் வெளியேறிவிட்டனர் என்றார்.

சுற்றுலாப் பயணிகள் குளவிகளின் தாக்குதலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என்றும் அவர்களில் பெரும்பாலோர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அதிக வருகையால் குளவிகளின் கூடுகள் கலைந்திருக்கலாம் என  நம்பப்படுகிறது.

இதேவேளை, குளவி தாக்குதலின்றி சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், இல்லாவிடில் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் சுற்றுலா வழிகாட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குளவிகள் கலையும் போது அவற்றைவிரட்ட நீராவியை தெளிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக திட்ட அலுவலர் தெரிவித்தார். பயணச் சீட்டுகளைப் பெற்று அப்பகுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழந்த சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து அறவிடப்பட்ட கட்டணத்தை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X