2026 ஜனவரி 21, புதன்கிழமை

சின்ன இங்கிலாந்துக்கு பெரும் சிக்கல்

Editorial   / 2021 ஏப்ரல் 25 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி சந்ரு

சின்ன இங்கிலா​ந்து என வர்ணிக்கப்படும் நுவரெலியாவுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

நுவரெலியாவுக்கு வருகைதருவதை  தவிர்க்குமாறு அரசாங்க அதிபர் அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், நுவரெலியா நகருக்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் நேற்றையதினம் படைபெடுத்திருந்தமை அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு  வருகைத்தந்தவர்களில் பலர் முக்கவசம் அணியாதும் கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கான, சுகாதார விதிமுறைகளை பேணாமலும் நடமாடியமையை அவதானிக்க முடிந்தது.

இதனால், நுவரெலியா வாழ் மக்கள் கொரோனா தொற்று அச்சம் கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X