Gavitha / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்காக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது சொந்த நிதியான 3 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நவம்பர் 25ஆம் திகதிக்கான கட்சி ஊழியர்களுக்கான சம்பளத்தைச் செலுத்துவதற்காக, கட்சித் தலைவர் நன்கொடை வழங்கியதை, கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஷமால் செனரத் உறுதிபடுத்தினார்.
சிறிகொத்தவில் பணியாற்றும் 36 பணியாளர்களுக்கு சம்பளத்தை வழங்குவதற்காகவே, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.
சவாலான சூழ்நிலைகளிலும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது கடமைகளை ஒருபோதும் புறக்கணித்தது இல்லை என்று, பிரதி பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
சிறிகொத்தவுடன் இணைக்கப்பட்ட ஊழியர்களின் சம்பளத்தை, கட்சிக்கு செலுத்த முடியாதமையால், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகம் திண்டாடி வருவதாக, சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் இடத்துக்கு, இன்னும் எந்தவொரு உறுப்பினரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago