S.Renuka / 2026 மார்ச் 02 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாக கூறப்படும் நபருக்கு 53 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2.10 இலட்சம் இந்திய ரூபாய் அபராதமும் விதித்து நாதாபுரம் போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நொச்சாடு முளியங்கள் பகுதியை சேர்ந்தவர் முகமது ரைகான் (வயது 41). தொழிலாளி. இவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் விபத்தில் படுகாயமடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.
அப்போது வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேராம்பிரா பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் பொலிஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, முகமது ரைகானை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை நாதாபுரம் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கில் 13 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய முகமது ரைகானுக்கு 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 2.10 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தேவன் கே.மேனன் தீர்ப்பளித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago