Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பதிவு செய்யாமல் சீதுவ பகுதியில் உள்ள இரண்டு களஞ்சியங்களில் இருந்து 650,000 கிலோ கிராம் (650 தொன்) சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை, இன்று மாலை கைப்பற்றியுள்ளது.
இலங்கை விமானப்படை உளவுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை இரண்டு களஞ்சியங்களை சோதனையிட்ட போது, இரண்டு களஞ்சியங்களின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், சீனியும் கைப்பற்றப்பட்டது.
இரண்டு களஞ்சியங்ளுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு மாவட்ட புலனாய்வு பிரிவின் தலைவர் பிரதீப் களுதரஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனைகளை மேற்கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025