2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’சீனியில் கையை வைத்தது மனச்சாட்சி இல்லாத செயல்’

Editorial   / 2021 மார்ச் 15 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக, உலக நாடுகளில் அரசாங்கம் கடன்களை வாங்கி வருகின்ற நிலையில், 16 பில்லியன் (1,600 கோடி ரூபாய்) வரி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது, மனச்சாட்சி இல்லாத செயற்பாடாகவே அமைந்துள்ளதெனத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, இந்தப் பாரியளவில் இடம்பெற்ற சீனி வரி மோசடி குறித்து ஆராய, விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். 

'சீனி வரி மோசடியால் நாட்டுக்கு 15.95 பில்லியன் (1,595 கோடி ரூபாய்)  நிதி இழக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிதிசெயற்குழுவில் நிதியமைச்சு உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதனை மறைக்க அரசாங்கம் தற்போது பல வழிமுறைகளைக் கையாள்கின்றமை தெரிகிறது' என்றார்.  


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (14)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், 
சீனி வரி மோசடியை மறைப்பதற்காக, அதிகாரிகளைப் பயன்படுத்தி பல்வேறு அறிக்கைளை விடுத்து வருவதும் தெரிகின்றதெனத் தெரிவித்த அவர், நிதியமைச்சு, வர்த்தக அமைச்சின் பக்கம் இதனை தள்ளப் பார்க்கின்றது. வர்த்தக அமைச்சு பல்வேறு கதைகளைக் கூறி இதனை மூடி மறைக்கப் பார்க்கின்றது என்றார். 


'இந்தப் பந்தை எந்தப் பக்கம் நகர்த்தினாலும் இந்த மோசடி அம்பலமாகிவிட்டது. வருடாந்தம் 5 இலட்சத்து 50,000- 6,50,000  மெற்றிக் தொன் சீனியே இறக்குமதி செய்யப்பட்டது. அதாவது மாதாந்தம் 50,000 மெற்றிக் தொன் சீனியே இதுவரை இறக்குமதி செய்யப்பட்டது. அதேபோல் 2019ஆம் ஆண்டு மாதமொன்றுக்கு 46,000 மெற்றிக்தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், இந்த மோசடி இடம்பெற்ற காலப்பகுதியில் மாதத்துக்கு 80இ000 மெற்றிக் தொன் சீனி இறக்குமதிச் செய்யப்பட்டுள்ளது என்றார்.

'நாட்டில் தேநீர் அருந்துபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தமையே இதற்கான காரணமாக அமையவில்லை. மாறாக, மோசடிக்கு வழியேற்படுத்தவே இவ்வாறு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதென சிறு குழந்தை கூட அறிந்துகொள்ளும்' என்றார்.

அதேபோல் 50 ரூபாயாக காணபட்ட வரியை 25 சதவீதமாக குறைத்து, யாரின் கைக்கு இதன் இலாபம் சென்றதென மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். ஆகையால், பாரியளவில் இடம்பெற்றுள்ள சீனி வரி மோசடி குறித்து ஆராய விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை  ஒன்றை நியமிக்குமாறும் அதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர்களை நியமிப்பதும் அவசியமானதாகும் என்றார்.

அரசாங்கத்தை சரியாக வழிநடத்துவதே 'வியத்மக' அமைப்பின் நோக்கமாகும். ஆனால், இந்த மோசடி குறித்து வியத்மக அமைப்பு தமக்கு எதுவும் தெரியாதெனக்  கூறி கையைத் துடைத்துக்கொள்ள முடியாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .