2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சீன அமைச்சருடன் ஜனாதிபதி பேசியது என்ன?

Nirosh   / 2022 ஜனவரி 09 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச்சபையின் உறுப்பினருமான வாங் யீ (Wang Yi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. 

ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. 

கொரோனா காலத்தில் சீனாவின் உதவிகளுக்காக ஜனாதிபதி இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு வரக்கிடைத்தமைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சீன வௌிவிவகார அமைச்சர் நெருக்கமான நண்பன் என்றவகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். 

கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச்செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்த வாங் யீ, எதிர்வரும் காலங்களில் அது நிறைவேறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .