2026 மே 07, வியாழக்கிழமை

dd

சீன பாதுகாப்பு அமைச்சர் புறப்பட்டார்

J.A. George   / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங், சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் (27) நாட்டை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை நேற்று (28) சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் இன்று காலை 8.55 மணியளவில் சீனா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

அவருடன் 37 பேர் இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அனைவரும் சீன விமான படைக்கு சொந்தமான பீ-4026 என்ற விசேட விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .