Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 மார்ச் 08 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று காலையில் இருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், 8ஆவது நாளான இன்று தமது போராட்டத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுத்துள்ளனர்.
தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தே, இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக, சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக, பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிரந்தரநியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும் எனவே, தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
25 minute ago
25 minute ago