2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நடந்தது என்ன?: சுசில் குறித்து ஜோன்ஸ்டன்

Nirosh   / 2022 ஜனவரி 04 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் திட்டங்கள், கொள்கைகளை சுசில் பல தடவைகள் விமர்சித்துள்ளார். இதனாலேயே ஜனாதிபதி சுசிலின் பதவியை பறித்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும்  தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு  உள்ளது.   கொள்கைகளில் தவறு இருந்தால், அதைப் பற்றி பேச உரிய இடங்கள் உள்ளன. அது பற்றி அமைச்சரவையில் பேசலாம். மேலும்,  இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்.  அந்த சமயங்களில்  அதைப் பற்றி பேசலாம் எனவும் தெரிவித்தார். 

மூத்த அமைச்சர்கள் என்ற முறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்  ஜனாதிபதி அவர்கள் சரியான முடிவை எடுத்துள்ளார். இது முன்னரே எடுத்திருக்க வேண்டிய முடிவு. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை புரிந்து கொள்ளாமல் அமைச்சுப் பதவியை வகிப்பது  ஏற்புடையதல் எனவும் கூறினார்.

மேலும், வௌியில் செய்யும் அரசியலை அமைச்சரவையில்  செய்ய  முடியாது. அமைச்சரவைக்குள் எதனையும் பேசி தீர்த்துக்கொள்ள ஜனாதிபதி முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். எமது அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X