Freelancer / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமன்னார் - உறுமலை கடற்கரைப் பகுதியில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது.
இதன்போது சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 8 கிலோ 960 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட தங்கம் மற்றும் படகுடன் சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. R
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026