2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சுய தனிமைப்படுத்தலில் மற்றுமொரு அமைச்சர்

Freelancer   / 2021 ஜூலை 31 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பில் உள்ள தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளார்.

தனது இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமைச்சர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

அமைச்சரின் இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த திங்கட்கிழமை முதல் மின்சக்தி அமைச்சு மூடப்பட்டுள்ளது.

மேலும், தாம் நலமாக இருப்பதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

அவரது சுய-தனிமைப்படுத்தல் காலம் வரும் புதன்கிழமையுடன் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை,  விமல் வீரவன்சவும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X