2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சுவர் இடிந்து விழுந்து இளம் பெண் மரணம்

Freelancer   / 2025 மார்ச் 24 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில்  23 வயதான பிரசாதினி பிரியங்கிகா என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார். 

களுத்துறை பனாபிட்டியவில் உள்ள தனது காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காதலன் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு உணவினை வழங்குவதற்காக வீட்டின் பின்னால் சென்றிருந்த வேளை, அந்த நேரத்தில் பிரியங்கிகாவும் வீட்டின் பின்னால் உள்ள சுவர் அருகே நின்று கொண்டிருந்தார். 

அப்போது, ​​திடீரென சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்த போது, பிரியங்கிகா அதில் சிக்கிக்கொண்டார். 

குடியிருப்பாளர்கள் உடனடியாக பிரியங்கிகாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் உயிரிழந்தார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X